வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது
தேனி மாவட்டம் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் தொற்று காரணமாக சித்திரை திருவிழா நடைபெறவில்லை தற்பொழுது கோவிட் தொற்று குறைந்தநிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சித்திரை திருவிழா தொடங்கியதை அடுத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படி சார்பாக அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார் இதில் நான்காம் நாளான இன்று முக்கிய நிகழ்வாக அம்மன் திருத்தேரில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
இதில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திண்டுக்கல் சரக டிஐஜி தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தேனி காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கர கோஷங்கள் எழுப்பிதேரை வடம் பிடித்து இழுத்து முதல் நாள் எல்லைக்கு கொண்டு சேர்த்தனர்.
No comments:
Post a Comment