அதனையொட்டி தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம், ராஜகோபாலன் பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நேரலை ஒளிபரப்பினை விவசாயிகளுடன் சேர்ந்து ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் பல்வேறு நல திட்டங்களை எம்எல்ஏ மகாராஜன் விவசாயிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.ராஜகோபாலன் பட்டி ஊராட்சி தலைவர் வேலுமணி பாண்டியன் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே .பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் வேளாண் துறை துணை இயக்குனர் கண்ணன், உதவி இயக்குனர் சரவணன் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஆறுமுகம், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உள்பட பலர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி முன்னாள் சேர்மன் ஆ.ராமசாமி, திமுக பேரூர் கழக செயலாளர் பூஞ்சோலை சரவணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment