ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் பழமைவாய்ந்த பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக்கோவில் கடந்த 1820 ஆம் ஆண்டு கட்டப்பட்ட 202 ஆண்டுகள் பழமையானது, 3 நாட்கள் நடைபெற்ற யாகசாலை பூஜைகள் முடிவற்ற நிலையில் இன்று காலையிலிருந்து ஆகமவிதிப்படி பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
பின்பு கடம் புறப்பாடாகி 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் மூலவர் பத்ரகாளியம்மன் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிசேகத்தை ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை நூற்றுக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
கும்பாபிசேகம் முடிந்தவுடன் பத்ரகாளியம்மன் விக்கிரகித்திற்கு தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு அன்னதானம் நடைபெற்றது.
No comments:
Post a Comment