மது விற்பனை செய்த பார்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மது பாட்டில்கள் பறிமுதல். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 23 July 2022

மது விற்பனை செய்த பார்களில் காவல்துறையினர் திடீர் சோதனை மது பாட்டில்கள் பறிமுதல்.

தேனி மாவட்டம், கடமலை - மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கடமலைக்குண்டு குமணன்தொழு, மயிலாடும்பாறை, மூலக்கடை, தங்கமாள்புரம், வருசநாடு ஆகிய கிராமத்தில் அரசு அனுமதி இல்லாமல் பார் செயல்பட்டு வந்தது. இந்த பாரில் அதிகாலை 5 மணி முதல் இரவு முழுவதும்  மது விற்பனை நடைபெறுவதாகவும் இதனால் அதிகாலையில் குடிமகன்கள் மது அருந்துவதால் கூலி வேலைக்கு செல்வதில்லை.   


பெரும்பாலான குடும்பங்க ளில் தினந்தோறும் பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் அதிகாலையில் குடி மகன்கள் மது  குடித்துவிட்டு  பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்ததாகவும் இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் காவல்துறைக்கு  தொடர்ந்து புகார் வந்து கொண்டிருந்தது.


வருபவர்கள் இன்று அதிகாலை முதல் மது விற்பனை நடைபெறும் இடங்களை ஆண்டிபட்டி துணை கண்காணிப்பாளர் தலைமையில் கடமலைக்குண்டு ஆய்வாளர் சரவணன் சார்பாய்வாளர்கள் அருண்பாண்டியன் மற்றும் ஜெயக்குமார் அரசு அனுமதி இல்லாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த மதுபான பார்களை சோதனை செய்து கூடுதல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 60  மது பாட்டில்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad