ஆண்டிபட்டி பி.ஆர்.கே. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 23 வது ஆண்டு விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 16 March 2024

ஆண்டிபட்டி பி.ஆர்.கே. நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி 23 வது ஆண்டு விழா.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி நகரில் உள்ள பி.ஆர்.கே . நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியின் 23 வது ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தொழிலதிபர் அமரேசன் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார். பள்ளியின் தாளாளர் பி.ஆர்.கண்ணன் வரவேற்று பேசி, துவக்க உரையாற்றினார். பள்ளியின் முதல்வர் பொன்மலர் ஆண்டு அறிக்கை வாசித்து விழா ஒருங்கிணைப்பு பணிகளை செய்து இருந்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் ஞானபாரதி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் சி.ஆர். ராஜா, மாரியப்பன், அக்ரி சீனியப்பன், ஓய்வு மாவட்ட நூலகர் சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். விழாவில் மாணவ ,மாணவிகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், ஆடல் பாடல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முத்தாய்ப்பாக பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சூரியஜெயம் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad