100 அடி உயர இலவம் மரத்தில் ஏறி காய் பறிக்க சென்று கீழே இறங்க முடியாமல் தவித்த கூலித்தொழிலாளி தீயணைப்பு துறையினரும் பத்திரமாக மீட்பு.காவல்துறையினரும் - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 25 April 2022

100 அடி உயர இலவம் மரத்தில் ஏறி காய் பறிக்க சென்று கீழே இறங்க முடியாமல் தவித்த கூலித்தொழிலாளி தீயணைப்பு துறையினரும் பத்திரமாக மீட்பு.காவல்துறையினரும்

தேனி மாவட்டம் போடி  வேட்ட வராயன் கோவில் அருகே தனியார் தோட்டத்தில் உள்ள 100 அடி உயர  இலவம் மரத்தில் ஏறி காய் பறிக்க சென்று கீழே இறங்க முடியாமல் தவித்த பழங்குடி மலைவாழ் இன கூலித்தொழிலாளி தீயணைப்பு துறையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பத்திரமாக மீட்பு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் புதூர் வேட்டை வராயன் கோயில் பாலத்திற்கு அருகே  தனியார் தோட்டத்தில் உள்ள இலவம் மரங்களில் தற்போதுகாய்கள் பறிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே  இயல்பாகவே  பழய இளவமரங்க சுமார் 100 அடியில் இருந்து 120 அடி உயரம் வளரக்கூடியது. மேலும் இம்மரங்களில் ஆங்காங்கே முட்கள் இருக்கும்  நன்கு மரமேறி அனுபவம் பெற்றவர்கள் மட்டுமே இதுபோன்ற மரங்களின் உச்சியில் ஏறி காய்கள் பறிக்க முடியும். 

தற்போது இது போன்ற மரங்களில் ஏறி வேலை பார்ப்பது அரிதாகி வரும் வேளையில் போடி சோலையூரைச் சேர்ந்த பழங்குடியின மலைவாழ் சமூகத்தைச் சார்ந்த கூலித்தொழிலாளி 62 வயது மதிக்கத்தக்க  வேலு என்பவர் தினக்கூலி அடிப்படையில் மரங்களில் காய் பறிக்கும் வேலைக்கு வந்துள்ளார். தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களில் ஏறி காய்கள் பறித்துப் போட்டு விட்டு மூன்றாவது மரத்திற்கு ஏறி செல்லும் பொழுது திடீரென்று ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக உச்சியிலேயே உள்ள கொப்பிலே அமர்ந்துவிட்டார்.

மேலும் திடீர் தலைச்சுற்றல் காரணமாக கீழே இறங்க முடியாமல் தவித்த அவருடன் பணியாற்றிய மற்றொரு கூலித்தொழிலாளி அவரை பாதுகாப்பாக இருப்பதற்கு அவரை சுற்றி கயிறை கட்டி மரத்தில் பத்திரமாக அமர வைத்துள்ளார், அதனத் தொடர்ந்து தகவலறிந்த தோட்ட உரிமையாளர் உடனடியாக போடி தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்து பின்னர் காவல்துறைக்கும் தகவல் தெரியப்படுத்தினார்.


இந்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு கீழே இறங்க முடியாமல் தவித்து வந்த வேலுவை கயிறுகள் மூலமாக எந்தவித காயமும் இன்றி கீழே இறக்கி வந்து பத்திரமாக மீட்டனர்.  மீட்கப்பட்ட வேலுவை தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் அவருடைய பதட்டத்தை தனித்து மருத்துவ உதவிக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


எனவே தற்போது இதுபோன்ற மரமேறி வேலைபார்க்கும் விவசாய கூலிகள் அரிதாகி வரும் நிலையில் இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad