இந்த ஆர்ப்பாட்டத்தில் சீர்மரபினர் நல சங்கம் துணைப் பொதுச் செயலாளர் அன்பழகன், மாநில செயலாளர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் பாண்டீஸ்வரர், மாநில தொழிலாளர் அணி செயலாளர் ராஜபாண்டி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்டசெயலாளர் மாயாண்டி, தேனி மாவட்ட மகளிரணி தலைவி விஜயலட்சுமி, பூங்கொடி நகர தலைவர் வனராஜா, மாவட்ட செயலாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி ஆட்சியர் நுழைவாயிலின் முன்பாக சீர்மரபினர் நல சங்கத்தின் சார்பில் தென்மண்டல தலைவர் ராமமூர்த்தி தலைமையில் சாதிவாரி கணக்கெடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் விலங்குகளை கணக்கெடுக்கும் மத்திய மாநில அரசுகள் மனிதர்களையும் கணக்கெடக்க வேண்டும் என்று கூறி, நூதன முறையில் விலங்குகளின் படத்தை கையில் வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment