தேனி மதுரை சாலை பங்களா மேட்டில் சொத்து வரி உயர்வு, விலை உயர்வை எதிர்த்து அதிமுக சார்பில் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மதுரை சாலையில் பங்களாமேடு திடலில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகிக்க, கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐக்கையன், நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரியை 150% உயர்த்திய திமுக அரசைக் கண்டித்தும், விலைவாசி உயர்வினால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதால் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments:
Post a Comment