தமிழக அரசு சார்பில் இதுவரை 50 சதவீதத்தில் இருந்த சொத்து வரியினை 150 சதவீதமாக உயர்த்திட அறிவிப்பு வெளியானது இதனையடுத்து புதிய தமிழக கட்சியின் தேனி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சார்பில் தமிழக அரசின் அநியாய சொத்து வரி உயர்வை கண்டித்தும், சொத்து வரி உயர்வு அரசாணையை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் தேனி அல்லிநகரம் நகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையிலும், மாநில துணை அமைப்பு செயலாளர் பாலசுந்தரராஜ், மாநில நிகழ்ச்சி துணை ஒருங்கிணைப்பாளர் நாகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட இணை செயலாளர் வேல்மணி, மாவட்ட துணை செயலாளர் அய்யனார், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ராமமூர்த்தி முன்னிலையிலும், தேனி ஒன்றிய செயலாளர் முருகன். பெரியகுளம் ஒன்றிய செயலாளர் சண்முகவேல், பெரியகுளம் நகர செயலாளர் கார்நேசன், கடமலை மயிலை தெற்கு ஒன்றிய செயலாளர் பாலமுருகன், இளைஞரணி செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் கவியரசன் ராஜேஷ் பாண்டி, சின்னப்பாண்டி, தர்மராஜ், பாண்டீஸ்வரன், மனோஜ்குமார், செல்வகுமார், சுருளிச்சாமி மற்றும் புதிய தமிழக கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment