மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு தொடக்கம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 26 April 2022

மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு தொடக்கம்.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வை முன்னிட்டு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 93 மையங்களில் செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. 


இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக உத்தமபாளையத்தில் 34 மையங்கள், பெரியகுளத்தில் 28 மையங்கள், தேனியில் 31 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பிளஸ்-1 படிக்கும் 15 ஆயிரத்து 531 மாணவ-மாணவிகள், பிளஸ்-2 படிக்கும் 14 ஆயிரத்து 893 மாணவ-மாணவிகள் இந்த தேர்வில் பங்கேற்றனர். பள்ளிகளில் உள்ள நவீன ஆய்வுக்கூடங்களில் இந்த தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வில் பங்கேற்றனர்.


இதேபோல், தேனி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் 15 ஆயிரத்து 961 மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடந்தது. தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் உற்சாகமாக தேர்வில் பங்கேற்றனர். அப்போது தேர்வு மையங்களில் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 


தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் கல்வித்துறை அதிகாரிகள் இந்த செய்முறை தேர்வு நடைமுறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad