தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் சரஸ்வதி பெண்கள் தொழில் பயிற்சி பள்ளியின் 25வது ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது, இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியில் வெள்ளிவிழா நுழைவாயில், புதிய செயலாளர் அறை மற்றும் கண்காட்சி திறப்புவிழா ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் பொன்.சந்திரகலா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் முருகன் தலைமை வகிக்க பொதுச் செயலாளர் ராஜ்மோகன் பொருளாளர் பழனியப்பன் நாடார் சரசுவதி தொழில் பயிற்சி பள்ளி செயலாளர்கள் திருப்பதி பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகிக்க, நிகழ்ச்சியில் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களில் செயலாளர்கள் முதல்வர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment