தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 May 2022

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு.

தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இரண்டாவது முறை பொறுப்பேற்ற பாண்டியனுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேனி நகர துணைத் தலைவர் பெரியசாமி தலைமையில் மாவட்ட தலைவருக்கு மாலை, சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் தேனி நகர துணைத்தலைவர் ஏற்பாட்டில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயலாளர் மலைச்சாமி தலைமை வகிக்க மாவட்ட துணை தலைவர் பாண்டியராஜன் நகரத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகிக்க, நிகழ்ச்சியில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மணிகண்டன், மாவட்ட மகளிரணி தலைவி சுஜாதா மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் சந்தானதுரை மாவட்ட இளைஞரணி துணை தலைவர் அஜித் இளங்கோ மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு செயலாளர் செல்வேந்திரன் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி மாரியம்மாள் நகர பொதுச் செயலாளர் மதிவாணன் நகர துணைத் தலைவர் மீனா, OBC பிரிவு நகர தலைவர் போஸ், நகர செயலாளர் ஜெய முருகன் நகர இளைஞரணி தலைவர் முருகேசன், நகர மகளிர் அணி தலைவி தனலட்சுமி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செல்வகுமார் போடி கிழக்கு ஒன்றிய நகர துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad