தேனி மாவட்டம் தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழா.கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 17ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது இந்த திருவிழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கௌமாரி அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருவது மட்டும் அல்லாது தாங்களுடைய நேர்த்திக் கடன்களையும் நிறைவேற்றுகின்றனர் இதன் ஒரு பகுதியாக தீச்சட்டி எடுத்தல் அழகு குத்துதல் ஆயிரங்கண் பானை. எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை நிறைவேற்று கின்றனர்
இன்னிலையில் நாளை நடைபெறவிருக்கும் தேரோட்டம் திருவிழா பாதுகாப்பு பணிகள்.குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார் உடன் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே நேரில் ஆய்வு மேற்கொண்டார், மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டார், தேரோட்டம் நடைபெறும் வழித்தடங்களை பார்வையிட்ட தேனி மாவட்ட ஆட்சியர் தேர் செல்லுகின்ற சாலையின் குறுக்கே செல்லுகின்ற மின் வயர்கள் மற்றும் சாலையின் ஓரம் உள்ள மரங்களின் கிளைகளை அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார் இறுதியாக தேனி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் நிர்வாகிகளும் இந்து அறநிலைத் துறை அதிகாரிகளும் காவல் துறையினரும் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment