தேனி மாவட்டம் தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 10ஆம் தேதி முதல் துவங்கி வருகின்ற 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கௌமாரி அம்மனை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர், மேலும் தாங்கள் நேர்ந்து கொண்ட நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் வகையில் தீச்சட்டி எடுத்தும் ஆயிரங்கண் பானை அழகு குத்தியும் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று பாலை வீரபாண்டியில் உள்ள கௌமாரி அம்மன் திருக்கோவிலில் கௌமாரி அம்மனை தரிசித்து வேண்டிக்கொண்டார்.
முன்னதாக கோவிலில் பாரம்பரிய நேர்த்திக்கடனான முக்கொம்பு வடிவிலான கம்பத்திற்கு நீர் ஊற்றிய பின் அம்மனை தரிசனம் செய்தார். திருக்கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
உடன் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், மதுரை முன்னாள் எம்.பி.கோபாலகிருஷ்ணன், தென் சென்னை அதிமுக நிர்வாகி கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment