வங்கி எழுத்தர் பணியில் நடைபெறுகின்ற தேர்வில் தமிழ் மொழிக்கு இனி இடமில்லை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

வங்கி எழுத்தர் பணியில் நடைபெறுகின்ற தேர்வில் தமிழ் மொழிக்கு இனி இடமில்லை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம்.

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வங்கி எழுத்தர் பணியில் நடைபெறுகின்ற தேர்வில் தமிழ் மொழிக்கு இனி இடமில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தமிழ் மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டனம் தெரிவிக்கும் வகையில் தி க கட்சியின் சார்பில் மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகிக்க மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் வங்கி எழுத்தர் பணியில் தமிழுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை கண்டிக்கும் வகையில் கண்டன கோஷங்கள் எழுதியதோடு இதனால் தமிழ்நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு வரும் சூழ்நிலையில் ஏற்படும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சரவணன், நகரச் செயலாளர் முத்துச்சாமி, ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் கண்ணன், ஆகியோர் முன்னிலை வகிக்க திராவிட கழக மாவட்டச் செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் அன்புக்கரசன், மற்றும் நிர்வாகி சுருளி ராஜ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை, ஆதி தமிழர் கட்சி சமூக நல்லிணக்க பேரவை, தலித் மக்கள் சம்மேளனம், கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு, ஜெய்பீம் புரட்சிப்புலிகள், எஸ்டிபிஐ கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

No comments:

Post a Comment

Post Top Ad