ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் ஆண்டு விழா. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 May 2022

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் ஆண்டு விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் ப்ளவர் பள்ளியின் 17 வது ஆண்டு விழா தனியார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர்  ஹென்றி  அருளானந்தம் தலைமை தாங்கினார், பாதிரியார் ஜஸ்டின் திரவியம் இறை வழிபாட்டுடன் விழாவை துவக்கி வைத்தார். 

பள்ளியின் செயலாளர் மாத்யு  ஜோயல் வரவேற்புரையாற்றினார். ஓய்வு தலைமை ஆசிரியர் விவேகானந்தன், கே .எஸ். சுதர்சன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பள்ளியின் கல்வி ஆலோசகர் பிரைஸ்லின் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், முதல்வர் உமாமகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார் .நிகழ்ச்சியில் மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது . கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 

திருக்குறள்  ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தையும் ஒருங்கிணைப்பாளர்கள் கவிதா, பூமா, சிவப்பிரியா மற்றும் ராகினி ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad