மாற்றுதிறனாளி பெண் அரபி ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரம்ஜான் தினத்தை கொண்டாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

மாற்றுதிறனாளி பெண் அரபி ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரம்ஜான் தினத்தை கொண்டாட்டம்.

பெரியகுளத்தில் மாற்று திறனாளி பெண் அரபி ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கி தன்னம்பிக்கை ஏற்படுத்தி கண்ணீர் மல்க நெகிழ்ச்சி பேச்சு.


தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கிவரும் மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் 50-க்கும் மேற்பட்ட மனநல நோயாளிகளுக்கு செங்கல்பட்டை சேர்ந்த  மாற்றுத்திறனாளி  அமத்துர் ரகுமான் அரபி  ஆசிரியையாக தனியார் அரபிக் கல்லூரியில் பணியாற்றி வருகின்றார்.


ரம்ஜான் தினத்தில் தன்னைப்போல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்திட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில்  ரம்ஜான் தினத்தை மாற்றுத்திறனாளிகள் உடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு  ரம்ஜான் தினத்தை முன்னிட்டு இன்று பெரியகுளம் வந்த அவர் பெரியகுளம்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மன நலம்  பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து இனிப்புகள் வழங்கி தனது ரம்ஜான் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக என்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நிறைய பேரை சந்திக்க வேண்டும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகள் செய்து திருப்திப்படுத்த வேண்டும் நானும் திருப்தியாக இருக்க வேண்டும். 

மாற்றுத்திறனாளிகள் ஆக இருக்கிறவர்களை பார்க்கிறவர்கள் நாம் இவர்களை விட சிறப்பாக இருக்கின்றோம் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொண்டு தனக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து பெருமிதம் அடைய வேண்டும் தனக்கு மேல் உள்ளவர்களை பார்த்து குறைபட்டுக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த ரம்ஜான் தினத்தில் அனைவரையும் சந்தித்து இருக்கின்றோம் என்று ஆறுதல் கூறி வாழ்த்துக்களை தெரிவித்து கண்ணீர் மல்க பேசினார்.


அப்போது அங்கு இருந்த மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் அங்கு கூடியிருந்த அனைவரும் கண்ணீர் மல்க ரம்ஜான் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது, இந்த நிகழ்ச்சியின் போது அவருக்கு உறுதுணையாக இருந்து வரும் அவரது கணவர் ரசீது அகமது. அவரது சகோதரர் ஆலீம்.எம்.அகமது முஸ்தபா மற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஊழியர்கள் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad