பிரசித்தி பெற்ற தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலுக்கு தற்போது இருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கோயிலில் நடப்பட்டுள்ள முகத்திற்கு திரளான பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியில் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 20ம் தேதி கொடி ஏற்றம் எனப்படும் முக்கம்பம் நடும் விழா நடந்தது, வரும் மே 10ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை 8 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 13ஆம் தேதி திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது.

இந்நிலையில் திருவிழா துவங்க ஒரு வாரம் இருக்கும் நிலையில் தற்போதிருந்தே வீரபாண்டி கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது, கோயிலுக்கு வரும் பக்தர்கள் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் இருந்து மண் சட்டியில் நீர் எடுத்து வந்து இந்த கம்பத்திற்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர், திரளான பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தும் மாவிளக்கு எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment