கஞ்சா விற்பனை செய்வோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே தெரிவித்துள்ளார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 24 May 2022

கஞ்சா விற்பனை செய்வோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்க்ரே தெரிவித்துள்ளார்.


தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்ரே பிரவீன் உமேஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது:


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா குமணந்தொழு பகுதியை சேர்ந்த  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியான  முருகன் மற்றும் அவரது உறவினர்களின் 24 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும், அசையா சொத்துக்கள்  சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும். 


தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 647 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


இந்த ஆண்டில் இதுவரை 66 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 335 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 123 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  அதில் 17 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.


இதே போல தேனி மாவட்டத்தில் கூரியர் மூலம் விற்கப்படும் கஞ்சா விற்பனையை தடுக்க அவ்வப்போது மோப்பநாயின் உதவியுடன் சோதனை நடத்தப்படும்.


இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க தனிப்படைகள் அமைத்து கண்காணிப்பு  தீவிரப்படுத்தப்படும்.


தேனி மாவட்ட காவல் துறை சார்பில் கஞ்சா வியாபாரத்தை  ஒழிக்க அனைத்து  நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகள்,  உறவினர்களின் வங்கி கணக்குகள் குற்றச் செயலில் சம்மந்தப்பட்டிருப்பின் அவர்களுடைய சொத்துக்களும் முடக்கப்பட்டு வருவதாக கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad