இலவச கண் பரிசோதனை முகாம்-இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

இலவச கண் பரிசோதனை முகாம்-இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வரும் முன் காப்போம் திட்டம் மற்றும் சொர்ண மாளிகை உரிமையாளர் ஜெகநாத செட்டியார்  நினைவாக, சங்கர் கிளினிக், லயன்ஸ் கிளப், பெரியகுளம் கோவிந்தன் மயில்தாயம்மாள் திருமண மண்டபம், வட்டாரகளஞ்சியம், மாவட்டபார்வையிழப்பு தடுப்புசங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்-இலவச சர்க்கரை நோய் கண்டறிதல் முகாம் கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.


மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், நகர்மன்றத்தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.மருத்துவமருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்டோருக்கு கண்புரை பரிசோதனை செய்து தேனி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துசென்று இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன.ஏராளமானோர் கண் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை மேற்கொண்டனர்.


நிகழ்ச்சியில் சங்கர் கிளினிக், அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர், லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad