ரம்ஜான் சிறப்புத் தொழுகை ஊர்வலம்; பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 May 2022

ரம்ஜான் சிறப்புத் தொழுகை ஊர்வலம்; பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் கலந்தாய்வு கூட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வருகின்ற 3ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை மற்றும் சிறப்பு தொழுகை ஊர்வலம் நடைபெற உள்ள இந் நிலையில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து ஜமாத் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமை வைத்தார்


நிகழ்ச்சியில் வருகின்ற 3ஆம் தேதி பெரியகுளம் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நகரின் முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வருவதில் தொடர்ந்து கொரோனா நேற்று மீண்டும் பரவி வருவதால் கொரோனா தொற்றில்  இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு 500-க்கு பேருக்கு மிகாமல்தக்க இடைவெளி கடைபிடித்து அனைவரும் முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும்


அதேபோல ஊர்வலத்தில் வரக்கூடிய இஸ்லாமிய நண்பர்கள் பிற மதத்தினரையும் அரசியல் சார்ந்து மற்றும் பிற சமூகத்தினர் மனம்  புண்படுத்தும் படியான கோஷங்கள் எதுவும் எழுப்பமல் ஊர்வலம் நடைபெறும் பொழுது அமைதியான முறையில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாமல் ஒவ்வொரு ஜமாத்தில் இருந்தும் சுமார் 25 நபர்கள் அடங்கிய இளைஞர் கமிட்டியை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் ஊர்வலம் அமைதியான முறையில் நடப்பதற்கு காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.


ஊர்வலத்திற்கு முன்பாகவோ பின்பாகவும் இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் அதிவேக ராலி போன்று ஊர்வலத்தில் வருவதற்கு முயற்சி செய்வதை உடனடியாக விழா கமிட்டியினர் தடுத்து கட்டுப்படுத்த வேண்டும் தங்களை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் ஈத்கா மைதானத்தில் பிரார்த்தனை முடிந்து திரும்பும் பொழுது இளைஞர்கள் தெருக்களில் கூட்டமாக கூடி கோஷங்கள் எழுப்பி தன்னிச்சையாக ஊர்வலமாக போவதை தடுத்திட வேண்டும்.

ஊர்வலம் முடிந்து ஈத்கா மைதானத்தில் பிரார்த்தனையின் போதும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து முக்கியமாக எல்லோரும் முக கவசம் அணிந்து கிருமி நாசினி உபயோகம் செய்தும் அதிகமாக கூட்டம் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மூன்றாம் தேதி பெரியகுளத்தில் நடைபெறும்  ரம்ஜான் ஊர்வலத்தில் மேற்கண்ட விதி முறைகளை கடைப்பிடித்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் கேட்டுக்கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் காவல் ஆய்வாளர் மீனாட்சி தென்கரை காவல் ஆய்வாளர் சுகுமாரன் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் சதிஷ்.வேல் மணிகண்டன்  காவல் துறையினர் இசுலாமியர்கள் அனைத்து ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad