துணைத் தலைவர் பொன் கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் முருகேசன். சிறப்பு அழைப்பாளராக க.மயிலாடும்பாறை ஆணையாளர் திருப்பதி வாசகன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிராம சபையில் சிறப்பு தீர்மானங்கள் வருசநாட்டில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் செவிலியர்கள் நிரந்தரமாக வேலையில் இருப்பதும் தங்குவதும் சம்பந்தமாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மேலும் விவசாயிகளுக்கு கிஸான் அட்டை வழங்குவது. 2021 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை, துணை மின்நிலையம் அமைக்கவும் பஞ்சம்தாங்கி கண்மாயை தூர்வார வேண்டியும் கிராம சபையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
இதேபோல் மயிலாடும்பாறை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில்சுந்தரபாரதம், தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் நாகராஜ், முன்னிலை வகித்தார் வார்டு உறுப்பினர்கள் பாண்டியம்மாள் பரமானந்தன், குமார், ஆனந்தசெல்விரவி, சுரேஷ்பாண்டி, அருணாதேவி, மற்றும் சிறப்பு அழைப்பாளராக திமுக ஒன்றிய கவுன்சிலர் மச்சக்காளை, மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 423 சர்வே எண் கொண்ட இடத்தில் மந்தையம்மன் கோவில் அருகே புதிய நாடகமேடை கட்டுவதற்கும் அதிலுள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதற்கும் ஊராட்சி சார்பில் தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டது.
முருக்கோடை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் வினோத்குமார், செயலர் பாண்டியன், மயிலாடும்பாறை பொறியாளர்துறை மேற்பார்வையாளர் பரமசிவம், அனைத்து வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் தும்மக்குண்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னழகு சின்ன காளை தலைமையில் நடைபெற்றது, ஊராட்சி செயலாளர் சின்னசாமி மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கடமலைக்குண்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா தங்கம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரியா தனபாலன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி,அனைத்து வார்டு உறுப்பினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாலூத்து ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியாஉதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் பாலூ முன்னிலை வகித்தார், ஊராட்சி செயலர் முருகன், மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சிங்கராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்றது அனைத்து வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டங்களிலும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கிராம சபை கூட்டம் வாயிலாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment