அதன்படி பீரோ, நாற்காலி, எழுதுபொருட்கள், புத்தகங்கள், மின்விசிறி, குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மின்மோட்டார், சில்வர் பாத்திரங்கள், பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வாங்கப்பட்டன. அந்த பொருட்களை சீர்வரிசையாக வழங்கும் விழா நேற்று நடந்தது.
மேளதாளத்துடன் ஊர்வலம்
இதையொட்டி தாங்கள் வாங்கிய பொருட்களை ஒரு டிராக்டரில் கிராம மக்கள் ஏற்றினர். பின்னர் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக பள்ளியை நோக்கி புறப்பட்டனர். சிலம்பம் ஆடியபடியே சிலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர், பாலார்பட்டி தெற்கு பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் இறுதியில் பள்ளியில் முடிவடைந்தது. பின்னர் அனைத்து பொருட்களையும் தலைமை ஆசிரியர் ஜோஸ்பினிடம், கிராம மக்கள் வழங்கினர்.
இதைத்தொடர்ந்து பள்ளியின் 84-வது ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு தலைமை ஆசிரியை, தலைமை தாங்கினார். விழாவையொட்டி மாணவ-மாணவிகளின் கலைநிழ்ச்சி நடந்தது, மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி, துணைத்தலைவர் நெப்போலியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment