பெரியகுளம் மார்க்கெட் சாலை மக்கள் கூட்டத்திலும் வாகனங்களின் நெரிசலிலும் விழிபிதுங்கி தவிக்கிறது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 19 May 2022

பெரியகுளம் மார்க்கெட் சாலை மக்கள் கூட்டத்திலும் வாகனங்களின் நெரிசலிலும் விழிபிதுங்கி தவிக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம்  தென்கரையிலுள்ள சுதந்திர வீதி, பெரியகுளம் மார்க்கெட் இச்சாலையில் அமைந்துள்ளதால் மக்கள் கூட்டத்திலும் வாகனங்களின் நெரிசலிலும் விழிபிதுங்கி தவிக்கிறது. பெரியகுளம் நகர் பகுதியில் இருந்து சோத்துப்பாறை அணைக்கு செல்லும் பிரதான சாலையும், அரசு மருத்துவமனை தாலுகா அலுவலகம் உட்பட அரசு அலுவலகங்கள் செல்லும் பிரதான சாலையும் இதுதான் .அகலம் குறைந்த இந்த சாலையில் ஒரு லாரி வந்துவிட்டால் கூட போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். 


அரசு மருத்துவமனையில் இருந்து செல்லும் ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையில் இடைஞ்சல் இல்லாமல் செல்ல முடிவதில்லை. அதனால் ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும்,மேலும் இப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தினர் சாலைகளையும் ஆக்கிரமிப்பு செய்து வருவதால் மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது, பெரியகுளம் நகர பகுதிக்குள் நுழைவதற்கு பிரதான சாலைகளை தவிர வேறு எந்த சாலைகளும் இல்லை. 


எனவே அதிகரித்து வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் வாகனங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டும் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள பகுதியிலிருந்து காலேஜ் விளக்கு அல்லது கள்ளிப்பட்டி வழியாக தேனி சாலையை இணைக்கும் வகையில் இணைப்புச் சாலையை அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால், அது பெரியகுளம் நகருக்குள் நுழைய மற்றொரு சாலை ஆகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


எனவே, இணைப்புச் சாலை அமைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஆராய வேண்டும் எனசமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad