நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி டீன் பாலாஜி நாதன் தலைமையேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முன்னதாக பேராசிரியர் திருநாவுக்கரசு வரவேற்று பேசினார் .நிகழ்ச்சியில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் பால கணேஷ் குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
போலியோ, அம்மை, தட்டம்மை, ரண ஜன்னி ,தொண்டை அடைப்பான் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளது .அவை பயன்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் தடுப்பூசிகளினால் தடுக்கப்பட வேண்டிய நோய்களின் கண்காணிப்பு குறித்த அவசியத்தை விளக்கும் வகையில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள், மருத்துவ மாணவர்கள் ,ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ,பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விழா முடிவில் பேராசிரியர் செல்வகுமார் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment