வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள் வரலாற்று நிகழ்வை நடித்து காட்டிய மாணவர்கள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 May 2022

வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள் வரலாற்று நிகழ்வை நடித்து காட்டிய மாணவர்கள்.

ஆண்டிபட்டி விழாவில்  வீரமங்கை வேலுநாச்சியார், குயிலி,  மருது சகோதரர்கள் ஆகிய  விடுதலைப் போராட்ட வீரர்களின்  தியாகவரலாறை  கண்முன் கொண்டுவந்து நிறுத்திய பள்ளிச் சிறுவர்கள்.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி நகரில் உள்ள டைமண்ட் வித்யாலயா பள்ளியில் ஆண்டுவிழா இன்று இரவு நடைபெற்றது . விழாவுக்கு பள்ளித்தாளாளர் பாண்டிசெல்வம் தலைமை தாங்கினார் . விழாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர்கள் சிவன்-பார்வதி வேடமிட்டு  சூலாயுதத்துடன் ருத்ரதாண்டவம் இசைப்பாடலுக்கு ஆடியது  மெய்சிலிர்க்க வைப்பதாக இருந்தது.
இதையடுத்து மேடைக்கு வந்த எட்டாம்வகுப்பு மாணவ மாணவிகள் அக்கால உடையணிந்து வால்களை கைகளில்  ஏந்தி இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் போரிட்டு உயிரிழந்த முதல்பெண் வீராங்கனையும் தமிழக வீராங்கனையுமான வீரமங்கை வேலுநாச்சியாரின் தியாக வரலாற்று நாடகத்தை  தத்ரூபமாக நடித்து காட்டினார்கள்.  


இதில் சுதந்திரப் போரில் முதல் மனிதவெடிகுண்டாக மாறி துணிகளில் எண்ணெய் ஊத்தி உடலில் சுற்றி திரியாக்கி  ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கில் குதித்து அதை அழித்து இந்திய வரலாற்றில் பதிவு செய்த  வீரப்பெண் குயிலி  மற்றும் வேலுநாச்சியாருக்கு உதவிய  மருது சகோதரர்கள் ஆங்கிலேயருடன் மோதிய போர் காட்சிகள் இடம் பெற்றன . 


இதையடுத்து  விளையாட்டு உள்ளிட்ட பல்திறன்  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும்,  கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பட்டங்களும்  பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள் விழாவில் மாணவர்கள் பெற்றோர்கள் பார்வையாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad