பெரியகுளத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்தாட்ட முதல் போட்டியில் திருநெல்வேலி PAKK அணி வெற்றி பெற்றது, தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜுபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவு கோப்பைக்கான 61.வது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி நடை பெற்று வருகின்றது.
இதில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் திருநெல்வேலி, PAKK அணியும் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதியதில் 52-37 என்ற புள்ளிகள் பெற்று திருநெல்வேலி PAKK அணி வெற்றி பெற்றது
No comments:
Post a Comment