தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தென்கரை கடைவீதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் முக்கிய வணிக வளாகங்கள் மற்றும் மளிகை கடை, காய்கறிக்கடைகள் மருந்து கடை, உணவகங்கள், வங்கி போன்றவை அமைந்துள்ளன. இந்த தெருவில், கடந்த 2020-2021 ம் நிதியாண்டில், உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான பணிக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, ஏற்கனவே பேவர் பிளாக் போடப்பட்டிருந்த சிமெண்ட் சாலையை பெயர்த்து வைத்துள்ளனர். இதனால், குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் மழை நீர் கழிவு நீர் தேங்குவதால் பொது மக்கள், வியாபாரிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாலையை சீரமைக்க கோரி பெரியகுளம் நகர் நலச்சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று நகர்மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். சாலை அமைக்கப்படும், இந்த நிலையில், பெரியகுளம் நகராட்சி தென்கரை கடை வீதியில், ரூபாய் 25 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் இருபுறமும் கழிவு நீர் கால்வாய் மற்றும் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு அடிப்படை வேலைகள் துவங்கப்பட்டுள்ளன. ஒரு மாத காலத்திற்குள் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் என்று பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவகுமார் மற்றும் உதவிப் பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment