தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் 5 பேர் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள கட்டுமான பணிகள் மற்றும் நோயாளிகளுக்கு அடிப்படை வசதி ஆகியவை உள்ளனவா என்று இந்த மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர். ஆய்வின் போது, அவசரகால அறுவை சிகிச்சை பகுதியில் உள்ள வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், நோயாளிகளை அழைத்து செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் என்றும் மருத்துவ குழுவினர், பெரிய மருத்துவமனை மருத்துவ அதிகாரி களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நிகழும் அவல நிலையை இந்த குழுவினர் ஆய்வறிக்கை வெளியிடப்படுமா? ஆய்வு குறித்து எந்த தகவலையும் செய்தியாளர்களுக்கு மருத்துவ அதிகாரிகள் முறையாக தெரிவிக்காததன் உள்நோக்கம் என்ன? என்று செய்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தேனியில் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை எ.வ.வேலு ஆகியோர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்துவார்களா? என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment