ஆடு மாடுகள் மே ய்ச்சலுக்கு தடையை அகற்றக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 May 2022

ஆடு மாடுகள் மே ய்ச்சலுக்கு தடையை அகற்றக்கோரி கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தேனி மாவட்ட வன விவசாயிகள், மலைவாழ் மக்கள், நாட்டு மாடுகள் பாதுகாப்பு இயக்கம்சார்பில் தேனி மாவட்டம் வனப்பகுதியில் பல தலைமுறையாக குடியிருப்பு ஒரே சட்டத்திற்குப் புறம்பாக வெளியேற்ற முயற்சி செய்வதை கண்டித்தும், வன உயிரின சரணாலயத்தை காரணம் கூறி ஆடு மாடுகள் மேய்ச்சலுக்கு தடையை அகற்றக்கோரியும், மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தை கைவிடக் கோரியும், பல ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரியும், மாவட்ட வனத்துறை வன உரிமைச் சட்டம் 2006 இன் படி வழங்கியுள்ள உரிமைகளை மதிக்க கோரியும், விவசாய நிலங்களுக்கும் குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்கக் கோரியும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன் முன்னிலையில் நடைபெற்றது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள்,மாவட்ட பொருளாளர் செல்வன், இளைஞர் பெருமன்ற தாலுகா செயலாளர் ரமேஷ், சிவா நிதி, ஞானவேல், ராமகிருஷ்ணன், லட்சுமணன், முத்துமாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad