வருவாய்த்துறை மற்றும் நில அளவையர்களை இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய விவசாய சங்கத்தினர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 May 2022

வருவாய்த்துறை மற்றும் நில அளவையர்களை இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பிய விவசாய சங்கத்தினர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் 350 ஏக்கர் பரப்பளவிற்கு மேல் உள்ள பெரியகுளம் கண்மாய்.  இந்த கண்மாய் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டு மா, தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் தென்கரை விவசாய சங்கத்தினர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பெரியகுளம் கண்மாயின ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மனுதாரர்கள் ஆன விவசாய சங்கத்தினரின் கோரிக்கையின்படி 1950 ஆம் ஆண்டு முந்தைய ஆவணங்களின் அடிப்படையில் கண்மாயை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் வருவாய் துறையினர் மற்றும் நில அளவையர்கள் கண்மாய் ஆக்கிரமிப்பு பகுதிகளை நில அளவீடு செய்வதற்காக வந்தபோது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 1950 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆவணங்களை எடுத்து வராத நிலையில் அன்று கண்மாயை அளவீடு செய்வதற்கு விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து  கண்மாய் ஆக்கிரமிப்பை அளவை செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் ஐந்து மாதங்களுக்குப் பின்பு இன்று பெரியகுளம் வருவாய் துறையினர் மற்றும் நில அளவையர்கள் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்மாய் ஆக்கிரமிப்பு அளவீடு செய்ய வந்தபோது மனுதாரர்களான பெரியகுளம் தென்கரை விவசாய சங்கத்தினர் 1950 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆவணங்கள் கொண்டுவந்துள்ளீர்களா எனக் கேட்டபோது மீண்டும் 1980ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ஆவணங்களை மட்டுமே எடுத்து வந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து தென்கரை விவசாய சங்கத்தினர் நில அளவீடு செய்ய வந்த வருவாய்த்துறை மற்றும் நில அளவையர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


இதனைத் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் 1950 ஆம் ஆண்டிற்கு முந்தைய ஆவணங்களின் முறைப்படி பெரியகுளம் கண்மாய் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்றால் ஆக்கிரமிப்பை அளவீடு செய்யுங்கள் இல்லையென்றால் அளவீடு செய்ய வேண்டாமென வருவாய் துறையினர் மற்றும் நில அளவையர்களை திருப்பி அனுப்பினார்.


நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் நீதிமன்றம் உத்தரவிட்டும் வருவாய் துறையினர் மற்றும் நில அளவைகள் உரிய ஆவணங்களை எடுத்துவந்து நில அளவீடு செய்வதை தவிர்த்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுவதோடு மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad