ஆண்டிபட்டியில் சத்துணவு ஊழியர்கள் நடைபயண ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 7 June 2022

ஆண்டிபட்டியில் சத்துணவு ஊழியர்கள் நடைபயண ஆர்ப்பாட்டம்.

கடந்த 4ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை ராமேஸ்வரம் ஓசூர் உள்ளிட்ட ஏழு பகுதிகளில் இருந்து இரண்டாயிரத்து நூறு  கிலோமீட்டர் தூரம்  கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்களின் நடை பயண ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.  


இதன் ஒரு பகுதியாக ஆண்டிபட்டியில் இன்று பேருந்துநிலையம்   முன்பு பணிநிரந்தரம்,  காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாட்டில் இரண்டு தலைமுறைகளாக சத்துணவு திட்டம் சிறப்பாக அரசுகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் சத்துணவு ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு உடனடியாக பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு நிறைவேற்றக் கோரியும் கோசங்களையும் சத்துணவு ஊழியர்கள் எழுப்பினார்கள் .  இந்த நடைபயண ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad