ஆண்டிபட்டியருகே கானாவிலக்கில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி கடந்த 2003ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இன்று இரவு மின்னொளியில் மருத்துவ பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது .
இரவு மின்னொளியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார். துணைமுதல்வர் எழிலரசன் முன்னிலை வகித்தார். விழாவில் 2016 ஆம் ஆண்டு பேட்சில் சேர்ந்து பயின்று தேர்ச்சிபெற்ற 110 மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ பட்டங்கள் மற்றும் பாராட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
2022 ஆண்டுக்குரிய தங்கப்பதக்கம் மாணவி சபீகாவிற்கு வழங்கப்பட்டது. பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் அனைவரும் மருத்துவக்காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் . முன்னதாக நடைபெற்ற மருத்துவ மாணவிகளின் வரவேற்பு கண்கவர் பரதநாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது .
No comments:
Post a Comment