பொதுமக்களுக்கு தாமே முன்வந்து உணவு பரிமாறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

பொதுமக்களுக்கு தாமே முன்வந்து உணவு பரிமாறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணியர்  திருக்கோவிலில்  திமுக தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர்  கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரியகுளம் நகராட்சி திமுக நகர் மன்ற தலைவர் சுமிதா அவர்கள்  ஏற்பாட்டில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு  பாலசுப்ரமணியர் திருக்கோவிலில் உணவு வழங்க அன்னதானம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். 


இந்த அன்னதானம் நிகழ்ச்சியை திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ் செல்வன், பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் அவர்கள் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு  பொதுமக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். திராவிட முன்னேற்றக் கழக நகர் மன்ற தலைவர் ஏற்பாடு செய்த அன்னதான விழாவில்  திமுக -வை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் யாரும்  முன்வந்து பரிமாறாமல் இருந்த நிலையில்  திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர் மதன்குமார் அவர்கள் தானே முன்வந்து உணவுகளை கையில் எடுத்து பொதுமக்களுக்கு  பரிமாறினார்.  


திமுக கூட்டணி கட்சியை சேர்ந்த  மதன்குமார் அவர்களின் இத்தகைய செயல் அங்கு இருந்த  பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் இடையே பெரிதும் வரவேற்பை  பெற்றது. மேலும் பொதுமக்கள் மீது அக்கறை கொண்டு  அவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை கொண்ட இளம்வயது நகர்மன்ற உறுப்பினர் மதன்குமார் என்ற பெருமையை பெற்றவர் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் புகழாரம் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad