இதில் அ.தி.மு.கவின் நிரந்தர பொதுச் செயலாளராக விரைவில் பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியை வாழ்த்தி வரவேற்கிறோம் என குறிப்பிடப்பட்டிருந்தது, இந்த போஸ்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் வீடு அமைந்துள்ள தென்கரை, கைலாசபுரம், வடுகபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. மேலும்.ஓ.பி.எஸ்-ன் மகன் இரவீந்திரநாத் எம்.பி.அலுவலகம் அருகில் உள்ள பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்தது, பரபரப்பான போஸ்டர் ஒட்டியதுதென்கரை பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில், அ.தி.மு.கட்சி சார்பாக பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து போஸ்டர் ஒட்டிய சுரேஷ் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
No comments:
Post a Comment