பெரியகுளம் நகராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து 20வது வார்டு நகர் மண்ட உறுப்பினர் மணி வெங்கடேசன் காரசார பேச்சு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 July 2022

பெரியகுளம் நகராட்சியில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து 20வது வார்டு நகர் மண்ட உறுப்பினர் மணி வெங்கடேசன் காரசார பேச்சு.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் இன்று மாதாந்திர கூட்டம் நகராட்சி ஆணையாளர் புனிதன் முன்னிலையில்  நகர் மன்ற தலைவர் சுமிதா சிவகுமார் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் 20 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் மணி வெங்கடேசன் தனது நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள மில்லர் ரோடு தையல்நாயகி கோவில் சுற்றுச்சுவர் கழிவு நீரால் மாசு அடைந்து வருகிறது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியகுளம் வடகரை நகரின் மையப்  பகுதியில் மில்லர் ரோட்டில்  புதிய குப்பை கிடங்கு உருவாகி இருப்பதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பழைய ஒப்பந்தத்தை ஒரு மாத காலம் பொது மக்களின் நலனுக்காக நீட்டிப்பு செய்ய வேண்டும்.  


நகராட்சிக்கு தனிநபர் ஒருவர் செலுத்த வேண்டிய சொத்துவரி நிர்ணயித்த தொகையை உடனடியாக செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள சாலையில் மீன் விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கு இடையூறு தனி இடம் ஒதுக்குவது உள்ளிட்ட கோரிகைகளை வலியுறுத்தி  காரசாரப் பேச்சு  பேசினார். 

No comments:

Post a Comment

Post Top Ad