திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள், விரைந்து மீட்ட மீட்பு படையினர். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 29 July 2022

திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள், விரைந்து மீட்ட மீட்பு படையினர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அம்மாவாசை   விழாவிற்கு சென்று விட்டு திரும்பும் வழியில் யானைக்கெஜம் அருவியில் திடீர் வெள்ளத்தால் சிக்கிய பக்தர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறையினர்.


விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக நேற்று 28ஆம் தேதி நடைபெற்றது .  


திருவிழாவிற்கு விருதுநகர் மாவட்டம் தானிப்பாறை மற்றும் சாப்டூர் மலை ப்பாதையிலும் தேனி மாவட்டத்திலிருந்து உப்புத்துறை மலை பாதையிலும்  லட்சத்துக்கும்  மேற்பட்ட மக்கள் சென்றிருந்தனர் .  விழாவை முடித்துவிட்டு திரும்ப தேனி மாவட்டத்திலிருந்து சென்றவர்கள் உப்புத்துறை மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தனர் .  


அப்போது சதுரகிரி மற்றும் உப்புத்துறை  இடையே மலையில் உள்ள யானைகெஜம்   அருவியில் நேற்று இரவு பெய்த திடீர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது  . அப்போது அருவிப்பகுதியில் கடக்க முயன்ற ருக்கும் மேற்பட்ட 50க்கும் மேற்பட்ட  பக்தர்கள் சிக்கிக் கொண்டனர்.  


உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த  தீயணைப்பு துறையினர்  அவர்களை கயிறு கட்டி பாதுகாப்பாக மீட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad