ஆண்டிபட்டி அருகே கஞ்சா வியாபாரிகள் நான்குபேர்கள் கைது; 8 கிலோ கஞ்சா நாற்பதாயிரம் ரூபாய் பறிமுதல். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 19 July 2022

ஆண்டிபட்டி அருகே கஞ்சா வியாபாரிகள் நான்குபேர்கள் கைது; 8 கிலோ கஞ்சா நாற்பதாயிரம் ரூபாய் பறிமுதல்.

ஆண்டிபட்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்கிராமமான பாலூத்து பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கடமலைக்குண்டு போலீசாருக்கு ரகசியத்தகவல் வந்தது, இதையடுத்து போலீசார் பாலூத்து  பகுதியில் ரகசியமாக கண்காணித்தும்  அவ்வப்போது ரோந்தும்  சுற்றிவந்தனர்  . மலைப்பகுதி சேர்மலையாண்டி கோவில் பகுதியில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது, அந்த இடத்தில்  ஆட்டோவை மடக்கி போலீசார் சோதனையிட்டபோது ஆட்டோவில்  எட்டு கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 


இதையடுத்து கஞ்சாவை பறிபோல் செய்த போலீசார் ஆட்டோவில் வந்த பாலுத்து கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால், சத்யா,  ஜெயசூர்யா மற்றும் முத்துதேவன் பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி  ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவிற்ற பணம் 40 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர் . ஆண்டிப்பட்டி அருகே கஞ்சா வியாபாரிகள் மற்றும் 8 கிலோ கஞ்சா பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad