கைம்பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான உதவி தொகை நிறுத்தம், உதவி பெற்றோர் அதிர்ச்சி. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 14 July 2022

கைம்பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான உதவி தொகை நிறுத்தம், உதவி பெற்றோர் அதிர்ச்சி.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாகுட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர் கணவனால் கைவிடப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் என ஏராளமானோர்அரசு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை நம்பி ஜீவனாம்சம் செய்து வந்தனர்.


இந்நிலையில் திடீரென பெரியகுளம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்க்கு திடீரென உதவித்தொகை நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சிஅடைந்தனர்.இது குறித்து அதிகாரிகளிடம் உதவிதொகை நிறுத்தபட்டவர்கள் சென்று விவரம் கேட்டதற்கு சரிவர பதில் சொல்ல முடியாமல் அலைக்கழிப்பு செய்வதாக புகார் எழுந்துள்ளது.


மேலும் பெரியகுளம் பகுதிகளில் நிலச்சுவான்தார்கள் மாடி குடியிருப்புகள் வைத்துள்ளவர்கள், பைனான்ஸ்க்கு விடுபவர்கள் என தகுதி இல்லாத நபர்கள் அரசு வழங்கும் மாதாந்திர உதவித் தொகையை பெற்றுவருகின்றனர்.மேலும் இவர்கள் பல்வேறு வங்கி கணக்குகளில் இருப்பு பணமும் நகைகளும் வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றது.


ஆகவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் தனி அதிகாரிகளை நியமனம் செய்து ஆய்வு நடத்தி தகுதியற்ற பயனாளிகளை நீக்கம் செய்து ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட ஊனமுற்றவர்கள் வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அரசு உதவித் தொகையை வழங்க வேண்டுமென பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad