பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு நாள். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு நாள்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் கோவில் திருவிழா கொரோனா பேரிடர் காலம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவிழாவின் நிறைவு நாளான இன்று பக்தர்கள் பொதுமக்கள் ஏராளமான அக்னி சட்டி எடுத்து வரும் வைபவம் நடைபெற்று வரும் நிலையில் பெரிய குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உள்ள மக்கள் திருவிழாவில் பங்கேற்பு வகையில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு மதுபான கடைகள் இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டன.


இந்நிலையில் இன்று பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர் புனிதன் தலைமையில் வணிக வளாக கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது.ஏலத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும் நகர மன்ற தலைவர் நகரமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை மாறாக பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


திருவிழா காலங்களில் நகராட்சி அலுவலகத்தில் டெண்டர் நடைபெறுவது பெரியகுளம் பகுதி வாசிகள் முகம் சுழிக்கு வகையில் இருப்பதாகவும்,மேலும் நகர மன்ற அலுவலகத்தில் எந்த நேரம் பார்த்தாலும் பெண் கவுன்சிலர்களின் கணவன்மார்கள் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்தங்கள் பூமி பூஜை போன்ற அரசு விழாக்களில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதாகவும் இதுகுறித்து தமிழக அரசும் தமிழக முதல்வர் அவர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad