அதிமுக பிரமுகரின் பரபரப்பு சுவரொட்டி, போலீசில் புகார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

அதிமுக பிரமுகரின் பரபரப்பு சுவரொட்டி, போலீசில் புகார்.

சென்னையில் அஇஅதிமுகவில் நடைபெற்ற பொதுக்குழுவில் கட்சியின் இடைக்காலபொதுச் செயலாளராகஎடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.


இந்நிலையில் ஓபிஎஸ் இன் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு சுரேஷ் என்பவர் வாழ்த்து சுவரொட்டி அச்சடித்து ஒட்டி உள்ளார்.அதில் அவர் தனது கட்சியின் உறுப்பினர் அட்டையையும் அச்சிட்டு உள்ளார்.


மேற்படி சுரேஷ் என்பவர் மீது அதிமுகவில் பொதுக்குழு கூடுவதற்கு முன்பே கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று சுவரொட்டி ஒட்டியதால் ஓபிஎஸ் ஆதரவாளரும் தேனி மாவட்ட செயலாளருமான சையது கான் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் தென்கரை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad