பெரியகுளத்தில் மழை நீர் பாதிப்பை தடுக்க எம்.எல்.ஏ மற்றும் நகர்மன்ற தலைவர் ஆய்வு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 August 2022

பெரியகுளத்தில் மழை நீர் பாதிப்பை தடுக்க எம்.எல்.ஏ மற்றும் நகர்மன்ற தலைவர் ஆய்வு.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி எல்லைக்குட்பட்ட வாரி வாய்க்கால் மற்றும் புதுப் பாலம், ஆடு பாலம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ள பாதிப்பை தடுக்கும் பொருட்டு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தும் விதமாக, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆய்வு செய்தார். 


வராக நதி செல்லும் புதுப் பாலம் அருகே புதிதாக தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். வாரி வாய்க்கால் பக்கவாட்டு சுவர் பாதுகாப்பிற்காக மணல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 


உடன், நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார், பெரியகுளம் நகர் கழக திமுக செயலாளர் முகமது இலியாஸ், மஞ்சளாறு வடிநில கோட்ட நீர் வளத்துறை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர்  சவுந்தர் மற்றும் திமுக நிர்வாகிகள் ஆகியோர்  இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad