தேனி மாவட்டத்திற்கான முதல் மேம்பால கட்டுமானப் பணி தொடங்கியது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 August 2022

தேனி மாவட்டத்திற்கான முதல் மேம்பால கட்டுமானப் பணி தொடங்கியது.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் ஏராளமான மேம்பாலங்கள் அமைந்த நிலையில் தேனிக்கு தாமதமாக கிடைத்துள்ள இந்த புதிய வசதி வளர்ச்சியின் பின்தங்கிய நிலையையே காட்டுகிறது.

தேனி-மதுரை சாலை ரயில்வே கேட் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இதற்காக மேரிமாதா பள்ளி முன்பு இருந்து திட்டச்சாலை வரை 1.7 கிமீ. தூரத்திற்கு ரூ.70 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது. இருபுறமும் 38 தூண்கள் அமைகிறது.


தற்போது வலதுபுறம் மட்டுமே பணி நடைபெறுவதால் இடதுபுற சாலையை எதிரெதிரே வரும் வாகனங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மக்களிடையே ஆர்வம்: 

கடந்த மே மாத இறுதியில் தேனி மாவட்டத்திற்கான முதல் ரயில் இயக்கம் தொடங்கியது. 12ஆண்டுகளுக்குப் பிறகு இயங்கிய ரயிலை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கும் நிலை ஏற்பட்டது. இதே போல் மாவட்டத்தின் முதல் மேம்பாலப்பணியும் மாவட்ட மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad