கடமலைக்குண்டு அருகே தனியார் பள்ளியில் போதை தடுப்புவிழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 5 August 2022

கடமலைக்குண்டு அருகே தனியார் பள்ளியில் போதை தடுப்புவிழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கடமலைக்குண்டு ஹயக்கீரிவா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கடமலைக்குண்டு காவல்துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் பள்ளி வளாகத்தில் நடந்தது.


பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் குமரேசன், கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ். ஐ, அருண் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினர்.இறுதியில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன் நன்றியுரை கூறினார்.


இதில் எஸ்.பி., தனிப்பிரிவு காவலர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad