வராக நதி ஆற்றில் சாக்கடை நீர் கலக்கும் அவல நிலை தொற்றுநோய் பரவும் அபாயம். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 6 September 2022

வராக நதி ஆற்றில் சாக்கடை நீர் கலக்கும் அவல நிலை தொற்றுநோய் பரவும் அபாயம்.

பெரியகுளம் வராக நதி ஆற்றில் சாக்கடை நீர் கலக்கும் அவல நிலை தொற்றுநோய் பரவும் அபாயம் நகராட்சி நிர்வாகம் கவனிக்குமா 


பெரியகுளம் வராக நதி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் வராக நதி ஆற்று நீருடன் கலந்து செல்கிறது கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் மாவட்டம் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை தேனி மாவட்டம் பெரியகுளம் நகர் பகுதியில் வடகரை தென்கரை இரு பகுதியையும் இணைக்கும் பாலமாக பல்லாண்டு காலமாக வராக நிதி என்னும் ஆறு பாய்கிறது இங்கு வரும் தண்ணியானது சோத்துப்பாறை மலைப்பகுதியில் பெய்யும் கனமழையின் நீரானது இந்த ஆற்றில் கலந்து வருகிறது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினரால் வராக நிதி ஆற்றின் இரு புறங்களிலும் அழகர்சாமிபுரத்திலிருந்து புது பாலம் வரையும் இரண்டு பக்கமும் தடுப்புச் சுவர் 2 கோடி ரூபாய்க்கு கட்டப்பட்டது கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் தற்போது பெரியகுளம் நகர் பகுதியில் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் நீரில் கழிவுநீராக  நீரானது ஆற்றில் சுமார் பத்து இடங்களுக்கு மேல் அதற்கு தனி பாதை அமைக்கப்பட்டு  சுத்தமான வராக நதி ஆற்று நீருடன் கலப்பதற்கு ஏதுவாக நகராட்சி நிர்வாகம் வழிவகை செய்துள்ளது.


ஆனால் இன்றுவரை இதனை கண்டு கொள்ளவில்லை இரண்டு அரசு மாறியும் எந்த நடவடிக்கையும் இல்லை இது குறித்து பெரியகுளம் பகுதி மக்கள் மிகவும் வருத்தத்துடன் கூறுகையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் தற்போது இந்த கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காகத்தான் ஆனால் எந்த அரசும் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.


ஆகவே மாவட்ட நிர்வாகம் இதை தலையிட்டு வராக நதி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad