பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 September 2022

பெரியகுளம் கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு.

தேனி பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வியாழக்கிழமை 08.09.2022. மாலை 4.30 மணியில் இருந்து 6 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


நந்திகேஷ்வரருக்கு ஒன்பது வகையான அபிஷேகமும் கைலாசநாதர் சுவாமிக்கு ஒன்பது வகையான அபிஷேகமும் நடைபெற்றது, அதிக பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர், வருகை தந்த பக்தர்களுக்கு திருமுருகேசன் சப் இன்ஸ்பெக்டர் அவர்கள் சார்பாக பிரசாதம் வழங்கபட்டது.


சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப்பு குழு தலைவர் திருவி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவக்குமார் பொருளார் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள், கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர், நாளை கைலாசநாதர் மலைக்கோயிலில் பெளர்ணமி கிரிவலம் நடைபெறும், நாளை வெள்ளிக்கிழமை 9-9-2022 பெளர்ணமி திதி 6.25 மணி முதல் ஆரம்பம் மறுநாள் சனிகிழமை மாலை 4.35 மணியளவில் முடிவடைவதால் நாளை பெளர்ணமி கிரிவலமும் சிறப்பான அன்னதானமும் நடைபெறுவதால் பக்தர்கள் கிரிவலம் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad