தேனி மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஓபிஎஸ் சந்திப்பு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 October 2022

தேனி மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஓபிஎஸ் சந்திப்பு.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (15.10.2022) தேனி - மாவட்ட ஆட்சித் தலைவர் க.வீ.முரளிதரன் அவர்களை  நேரில் சந்தித்து மாண்புமிகு தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்ட ஆட்சி தலைவருக்கும் எழுதிய கடிதத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 10 கோரிக்கைகள்,அதன் முன்னுரிமை குறித்து கொடுக்க வேண்டும் என்ற கடிதம் சம்மந்தமாக கேட்டறியவும், தேனி மாவட்டம் மற்றும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.


இந்நிகழ்வில் போடி தெற்கு நகர செயலாளர் பழனிராஜ், தேனி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துபாலாஜி  சின்னமனுர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் விமலேஸ்வரன், அல்லிநகரம் நகர செயலாளர் ரங்கநாதன், போடி வடக்கு நகர செயலாளர்ஜெயராம் பாண்டியன், போடி ஒன்றிய செயலாளர்கள் செல்வகணபதி சுந்தர்ராஜன் மற்றும்  தேனி மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய,நகர,பேரூர் கிளை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad