பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 14 October 2022

பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும்,நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் விரிவாக்க பணிகள்,ஆராதனை கரையோரம் தடுப்புச் சுவர் அமைத்தல், போக்குவரத்து நெரிசலை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நகர்மன்ற அலுவலக கூட்ட அரங்கில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நகர மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், காவல் துணைக் கண்காணிப்பாளர் கீதா, நகராட்சி ஆணையாளர் புனிதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நஸ்ரின் பானு, பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் ராஜசேகர், மின்சார வாரிய பொறியாளர் சுரேஷ், வட்டாட்சியர் காதர்செரீப்,கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து நகராட்சிசுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர் மற்றும்  பல்வேறு அரசு துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad