பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு. - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 January 2023

பெரியகுளம் கைலாசநாதர் கோவிலில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு.


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோவிலில் இன்று மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் நிர்வாகத்தின் சார்பில்  பொதுமக்கள் சாமி தரிசனம்  நடைபெற்று வந்தது, பெரியகுளம் மற்றும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிந்து  கிரிவலம் சுற்றி சென்றும் ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். .

இந்நிலையில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர்செல்வத்தின் இளைய மகனும்  கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவருமான ஜெயபிரதீப் அவர்கள் அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சாமி தரிசனம் செய்தார். 


ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் அவர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில்  மாலை அணிவித்து  பரிவட்டம் கட்டப்பட்டு மரியாதை செலுத்தினார்கள். இந்த நிகழ்வில் கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.


மேலும் இன்று காலை முதலே கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்று வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழுவினர் அன்னதானத்தை ஏற்பாடு செய்திருந்தார்.  அதனை தியாகராஜ கல்பனா அவர்கள் அனைவருக்கும் வழங்கினார்கள் என தெரிவித்துள்ளனர் .

No comments:

Post a Comment

Post Top Ad