பெரியகுளத்தில் மின் கோபுர விளக்குகளை எம் எல் ஏ சரவணகுமார் துவக்கி வைத்தார். - தமிழக குரல் - தேனி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 7 January 2023

பெரியகுளத்தில் மின் கோபுர விளக்குகளை எம் எல் ஏ சரவணகுமார் துவக்கி வைத்தார்.


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட அரண்மனை தெரு, உழவர் சந்தை, காந்தி பூங்கா, மாரியம்மன் கோவில் வளாகம், மயானக்கரை ரஸ்தா ஆகிய பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 21.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறியரக மின்கோபுர விளக்குகளை பொது பயன்பாட்டிற்கு விளக்குகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நகர்மன்றதலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் கலந்துகொண்டு மின்விளக்குகளை துவக்கிவைத்தார்.


நிகழ்வில் திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ், தாமரைக்குளம் பேரூராட்சிதலைவர் பால்பாண்டி, நகராட்சி ஆணையாளர் புனிதன், சுகாதார ஆய்வாளர்கள் அசன் முகமது, சேகர், வார்டு உறுப்பினர்கள் வைகை சரவணன், லட்சுமி, பிரியங்கா ராஜ்குமார், சுதா நாகலிங்கம், கிஸோர்பானு, ஷாகீராபானு, பாண்டியராஜன், மின்பணியாளர் வசந்த், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு வார்டு உறுப்பினர்கள் வைகைசரவணன், லட்சுமி, பிரியங்கா ராஜ்குமார் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க பொன்னாடை அணிவித்து மின்விளக்குகளை அமைத்துக் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்க்கும், நகரமன்ற தலைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad